இராணுவ வளாகத்தின் மீது தற்கொலை தாக்குதல்..!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பன்னு என்ற பகுதியில் உள்ள இராணுவ வளாகத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2 கார்களை கொண்டு சென்று மோத வைத்து வெடிக்க வைத்துள்ளனர்.இதன் போது 09 பேர் உயிரிழந்துள்ளனர்.20 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இராணுவ வளாகத்திற்குள் 12 பேர் புகுந்து செல்ல முற்பட்ட வேளையில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பகதூர் ஆயுத குழுவானது பொருப்பேற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.