டொனால்ட் ட்ரம் மற்றும் புடின் பேச்சுவார்த்தையில்..!
ரஷ்ய உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோருக்கிடையில் இன்று இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.எனினும் இந்த பேச்சுவார்த்தையில் உள்ளடக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பான எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

3 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன் ரஷ்ய போரானது நடைப்பெற்று வருகிறது.இதனை முடிவிற்கு கொண்டுவர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இந்த நிலையிலேயே டொனால்ட் ட்ரம் மற்றும் புடின் இடையிலான பேச்சுவார்த்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.