தென்சீனக் கடல் பிராந்தியத்துக்குள் இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் நுழைந்திருக்கின்றன.

தாய்வானின் சுயாட்சி, தென்சீனக் கடல் பிராந்தியம் யாருடைய கட்டுப்பாட்டுக்குரியது ஆகிய இரண்டும் சீன – அமெரிக்க அரசியல் சலசலப்புக்கு முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றன. தென்சீனக் கடலின் சர்வதேசப் போக்குவரத்துப் பிராந்தியத்தில் அடிக்கடி தனது இராணுவக் கப்பல்களை உலவவைத்துச் சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது அமெரிக்கா.

அக்கடலில் உரிமை கோரும் அதையடுத்துள்ள நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குச் சீனா கொடுத்துவரும் தலையிடியை நேரிடவே அமெரிக்கா சமீப வருடங்களில் இந்தியா, ஆஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து அப்பகுதியில் உலவுகிறது.

அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான  USS Carl Vinson, USS Abraham Lincoln ஆகிய கடற்படைக் கப்பல்களே ஞாயிறன்று முதல் தென்சீனக் கடலில் பயணிப்பதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு ஞாயிறன்று தெரிவித்தது. அக்கப்பல்கள் அப்பகுதியில் வெவ்வேறு போர்ப்பயிற்சிகளில் ஈடுபடும் என்றும் அமெரிக்க அறிக்கை குறிப்பிடுகிறது. அந்தப் பயிற்சிகளில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் கடற்படைகளும் சேர்ந்துகொள்ளும்.

அதே சமயம் தனது வான்வெளியில் சீனாவின் போர் விமானங்கள் 13 அனுமதியின்றிப் பறந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்