நடந்து முடிந்த மாகாணமட்ட கணித ஒலிம்பியாட்போட்டியில் காரைதீவு கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலை சாதனை

படைத்து தேசிய மட்ட போட்டிகளிற்காக தெரிவாகியுள்ள எமது காரைதீவு கமு/இ.கி.மி பெண்கள் பாடசாலையினை சேர்ந்த தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவிகளான செல்வி.பி.வர்ஷினி , செல்வி.ரி.றோஜிகா மற்றும் தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவியான செல்வி.எஸ்.நிலுஜீகா ஆகிய மாணவிகளை கௌரவித்து மாலையணிவிக்கும் நிகழ்வானது இன்றையதினம் பாடசாலையின் முதல்வர் திருவாளர் சதாசிவம் ரகுநாதன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதி அதிபர் திருமதி.T.குலேந்திரன் அவர்களும் மற்றும் பாடசாலையின் கல்விசார், கல்விசார ஊழியர்களும், பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.


