மெக்ஸ் வெல் “ஹெலி வால் நட்சத்திரம்”- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..!
மெக்ஸ் வெல் ஹெலி வால் நடசத்திரம் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது “ஹெலிவால் நட்சத்திரம் சூரியனை சுற்றி வருகிறது.அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியிலிருந்து தெரியும்.அதே போலவே கிளேன் மெக்ஸ் வெல் 75 ஆட்டங்களில் ஒரு நல்ல ஆட்டத்தை விளையாடுகிறார்.இது கடைசியாக 1986ல் காணப்பட்டது.அது அடுத்ததாக 2061ல் காணப்படும்.பேட்டிங்கில் மெக்ஸ்வெல்லுக்கு இதே நிலை தான் .கிளேன் மெக்ஸ்வெல் கிரிக்கெட்டின் ஹெலிவால் நட்சத்திரம் “என்று தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றிப்பெற்றது.மெக்ஸ் வெல் பஞ்சாப் அணியை வெற்றிப் பெற வைப்பார் என்று பலரும் எண்ணிய நிலையில் அவர் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இந்த நிலையிலேயே சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.