இந்தியா பாகிஸ்தானிடையேயான சூழ்நிலை மிகவும் கவலையளிக்கிறது. – ஐ.நா பொது செயலாளர்..!
இந்தியா பாகிஸ்தானிடையேயான சூழ்நிலை மிகவும் கவலையளிப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ம் திகதி ஜம்பு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு த ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு உரிமைகோரியிருந்தது.
இந்நிலையிலேயே இந்தியா பாகிஸ்தானிடையே பதற்றம் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.