பஹல்காம் பிரச்சினையை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள்..!
பஹல்காம் விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய பாகிஸ்தானிடைய பதற்றமான சூழ்நிலை நிலவி விருகிறது.இது குறித்து இரு நாட்டு தலைவர்களிடமும் பேசு வீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில் இதற்கு டொனால் ட்ரம்ப் இவவாறு கருத்து தெரிவித்துள்ளார்.”இது சமீபத்திய ஜம்பு மற்றும் காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதலாகும்.நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்.
பாகிஸ்தானுடனும் நெருக்கமாக இருக்கிறேன்.மேலும் அவர்கள் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த போராட்டத்தை நிகழ்த்திவருகின்றனர்.இரு நாட்டு தலைவர்களையும் நான் அறிவேன் .அவர்கள் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை அவர்கள் ஒரு வழியிலோ வேறு வழியிலோ கண்டுப்பிடித்துவிடுவார்கள்.இந்த பிரச்சினையை அவர்களே தீர்த்துக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
