சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி – ப்ளூம்பெர்க் தகவல்
இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

30 எழுச்சி பெற்ற நாட்டு நாணயங்களில் இலங்கை 26ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 23 நாணயங்கள் வலுவடைந்துள்ள நிலையில், இலங்கை ரூபாயைச் சேர்த்து ஏழு நாடுகளின் நாணயங்கள் மதிப்பிழந்துள்ளன.
ரஷ்ய ரூபிள் முதலிடத்தையும், ஹங்கேரியன் ஃபோரின்ட் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இலங்கை ரூபாயின் வீழ்ச்சிக்கு, இறக்குமதி தேவைகள் அதிகரித்தல் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை காரணமாக வர்த்தகச் சுழற்சி விரிவடைந்ததுதான் முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.