ஏவுகணை சோதனை நடத்திய பாக்கிஸ்தான்..!
பாக்கிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.தரையில் இருந்து ஏவப்பட்டு தரையிலிருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை நடத்தியுள்ளது.இந்த ஏவுகணை 450 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமைப்பெற்றது.இந்த ஏவுகணை அணு ஆயுதத்தை தாக்கி செல்லும் திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய பாக்கிஸ்தானிடையே போர் பதற்ற சூழல் நிலவி வரும் சூழலில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது.மேலும் பாக்கிஸ்தான் மக்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றியுள்ளது.தூதரக நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் பாக்கிஸ்தான் செய்தி நிறுவனங்கள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று பாக்கிஸ்தானிலிருந்து இந்திய மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.இந்திய தூதுவர்கள் வெளியேறியுள்ளனர்.பாக்கிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான சூழ்நிலையில் பாக்கிஸ்தான் ஆனது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.