மின்மினி பூச்சிகள்..!
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 *மின்மினிப்பூச்சி*
படைப்பு கவிதை ரசிகனன்
குமரேசன்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
நீ என்ன
இருளின் அலங்காரமா..?
காதல் கவிதை
இயற்கை கவிதை
முயற்சி கவிதை போல்
நீ ஒளிக்கவிதையோ…?
விளக்கை ஏந்தி கொண்டு
எதைத் தேடிக் அலைகிறாய்..?
மின்வாரியத்தின் பக்கம்
போய் விடாதே !
பிறகு
உன்னிடமும்
மின்கட்டணம் வசூலிக்க
ஆரம்பித்து விடுவார்கள்…..
உன்னைப்
பார்க்கும் போது
பெரியவர்களும்
சிறியவர்களாக
மாறுவதுதன்
ரகசியம் தான் என்னவோ…?
நீ சூரியனிலிருந்து விழுந்த
ஒரு துளியோ…..?
உனக்கென்ன
அவ்வளவு பயமா ?
எங்க போனாலும்
விளக்கோடு போகிறாய்…
இருளில் தான்
நாங்கள்
உன்னை ரசிக்கிறோம்
நீ இருளை ரசித்திருக்கிறாயா?
எனக்கொரு சந்தேகம்
உன் விளக்கிற்கு
எண்ணெய் ஊற்றுகிறாயா ?
சார்ஜ் போடுகிறாயா ?
“கைவிளக்கேந்திய
காரிகை” என்ற பட்டத்தை
யார் தான்
உனக்கு
கொடுக்கப் போகிறார்களோ……?

நியூட்டனின்
புவிஈர்ப்பு விசையைக்
கண்டுபிடிக்க
கீழே விழுந்த ஆப்பிள்
உதவி செய்தது போல்…..
எடிசன் மின்விளக்கை
கண்டுபிடிக்க
நீதான் உதவி செய்தாயோ….?
எனக்கு
ஒரு கவிதையை
கொடுத்ததற்கு
நான்
நன்றி சொல்வதைக் கூட
காதில் வாங்காமல்
எதைத் தேடித்போகிறாய்
மின்மினிப்பூச்சியே…? *கவிதை ரசிகன்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻