மழையின் காரணமாக பலர் உயிரிழப்பு..!
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனனாயக நாட்டில் பலத்த மழையின் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.கிவுவில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை பெய்த மழையில் பல ஏரிகள் நிரம்பி வழிந்தன.

மேலும் கஸபா கிராமத்தை வெள்ள நீர் அடித்து சென்றது. இதன் காரணமாக 104 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.28 பேர் காயமடைந்துள்ளனர்.150 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.மேலும் 50 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர்.இவர்களை தேடும் பணி தீவிரமாக இடம் பெற்று வருகிறது.