மௌனமாய் புன்னகைப்பவள்..!
அன்னை / அம்மா / தாய் / மாதா
என்னருமை அம்மா!
உன்னை என்ன சொல்லி அழைத்தாலும்
அழைத்த வாய் இனிக்குது!
நானும் தாயாகி இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தாலும் உனக்கு நான் என்று செல்லமகளே!
தன்னுடல் மெலிவைக் கண்டு
கவலைப்படாமல்
என்னுடல் வளர்வைக் கண்டு
மகிழ்பவள்…!
நான் பேசுவதைக் கேட்டு
பேசுவதறியாமல்
மௌனமாய்
புன்னகிப்பவள்…!
நான் நானிலம் சிறந்திட பட்டங்கள்
பற்பல பெற வைத்தவள்!

தானும் ஆசை கொண்ட பெண்
என்பதையே மறந்து
எனக்கு அலங்காரம்
செய்து அழகுபடுத்தியவள்…!
என் உணர்ச்சிகளை
வெளிப்படுத்த
எனக்கென ஒரு மொழியை
அறிமுகப்படுத்தியவள்…!
இன்று நான் வாங்கிய விருதுகளுக்கு அடித்தளமான குத்தகைக்காரர் நீயே
எனது புதையலான பொக்கிஷமே!
செல்லமான ஜெயாம்மா!
தாயே நீ வாழி!
அன்புடன்
நா.ஆனந்தி சேது
சீர்மிகு சென்னை