கத்தார் சிரியாவுக்கு இராணுவத்தை அனுப்பப்போவதில்லை!
கடந்த வாரம் சவூதியின் வெளிநாட்டு அமைச்சர் தங்களது இராணுவத்தை சிரியாவுக்கு ஆயுத கடத்தலை அனுப்பவிரும்புவதாகச் சொல்லி அதையே கத்தாரும் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார். அமெரிக்கா சிரியாவிலிருக்கும் தனது இராணுவத்தைத் திருப்பியெடுக்கப்போவதாகச் சொல்லியிருந்தபோது, அமெரிக்காவின் இராணுவம் கைப்பற்றியிருக்கும் சிரியாவின் பிராந்தியங்களில் தங்களது இராணுவத்தை நிறுத்தி அவ்விடங்களில் ஈரானின் இராணுவம் வராமல் தடுக்கவே சவூதி அவ்விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.
“சவூதியின் வெளிவிவகார அமைச்சுக்கு மறுமொழி சொல்வதே அநாவசியம். அதுபோன்று அரபிய மக்களின் மூளைகளைச் சலவைசெய்யும் காரியங்களில் கத்தார் இறங்காது,” என்கிறார் கத்தாரின் வெளிவிவகார அமைச்சர்.