லண்டன் தேர்தல்கள் – தெரேசாவின் கட்சிக்கு வெற்றி தருமா?
03.05 வியாழனன்று லண்டனும் வேறு சில உள்ளூராட்சி சபை அதிகாரங்களுக்கான தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. வரிவிதித்தல், போக்குவரத்து மற்றும் குடியேற்றம் பற்றியவைகள் அத்தேர்தலின் வெற்றி, தோல்வியை முடிவுசெய்யும்.
பிரதமர் தெரெஸா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் பிரிட்டனில் ஏற்படுத்தியிருக்கும் எதிர்ப்பு அலை அவரது ஆதரவை இத்தேர்தல்களில் தண்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்சர்வேட்டிக் கட்சியின் கடந்த எட்டு ஆண்டு ஆட்சி பொதுத்துறைக்கான நிதியைக் குறைத்ததனால் ஏற்பட்டிருக்கும் மக்களின் வெறுப்பும் இத்தேர்தலில் பிரதிபலிக்கும்.
சமீபத்தில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பீடுகளின்படி ஜெரோமி கொர்பிய்னின் தொழிலாளர் கட்சி தெரெஸா மேயின் பழமைவாதிகள் கட்சியைவிட 22 விகிதம் அதிக ஆதரவைப் பெறுகிறது. தொழிலாளர் கட்சி கடந்த நாற்பது வருடங்களில் இத்தனை பிரபலமாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.