2305 பேர் சவூதியில் விசாரணைகளின்றிச் சிறையில்.
ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைச் சவூதி அரேபியா விசாரணைகளின்றி பத்து வருடங்களுக்கும் அதிகமாகச் சிறையில் வைத்திருப்பதாக “ஹுயூமன் ரைட்ஸ் வோட்ச்” குற்றஞ்சாட்டிச் சவூதியின் அரசகுமாரனைக் கண்டிக்கிறது.
சவூதிய அரசின் அதிகாரபூர்வமான விபரங்களின்படி 2,305 பேர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் ஒரு பகுதியினர் பத்து வருடத்திற்கும் அதிகமாக நீதிமன்றங்களெதிலும் முன்நிறுத்தப்படாமல் சிறையில் இருக்கிறார்கள்.
எம்.பி.எஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் சவூதியின் இளவரன் நாட்டின் அதிகாரங்களில் ஈடுபட்டு நாட்டின் சட்டங்கள் சிலவற்றை மாற்றி மக்களுக்கு முன்னைவிட அதிக சுதந்திரம் வழங்கியிருக்கும் அதே சந்தர்ப்பத்தில் விசாரணைகளில்லாது காவலில் வைக்கப்படுகிறவர்களின் தொகை அதிகமாகியிருப்பதாக அந்த மனித உரிமைகள் அமைப்புத் தெரிவிக்கிறது.