முஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்
பலஸ்தீனர்களின் நிலத்தை இஸ்ராயேல் கைப்பற்றிய 70 வருட ஞாபகார்த்த தினத்தை ஒட்டி காஸாவில் நடந்த துக்ககரமான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி உலக முஸ்லீம் நாடுகளெல்லாம் ஒன்றிணைந்து இஸ்ராயேலை எதிர்க்கவேண்டும் என்று அறைகூவுகிறார் துருக்கியத் தலைவர் எர்டகான்.
தனது நாட்டில் விரைவில் தேர்தலை எதிர்நோக்கும் எர்டகான் “இஸ்லாமிய கூட்டுறவை அமைப்பு நாடுகளின்” மாநாட்டில் பேசும்போது “இஸ்ரேயேலிய ஆக்கிரமிப்பாளர்கள் பலஸ்தீனர்கள் மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகங்களை எதிர்ப்பதன் மூலம் உலகின் மனிதாபிமானம் ஒழிந்துபோகவில்லை என்று நான் நிரூபிக்கவேண்டும்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.