ஐரோப்பிய ஒன்றியத்துக்கென ஒற்றைப் பொருளாதாரம்!
பிரெஞ்ச் ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஒற்றைப் பொருளாதார வலயமாக்கும் எதிர்காலத் திட்டம் ஒன்றை முன்வைத்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஒரு வரவு செலவுத் திட்டத்தையும், ஒரு பொருளாதார அமைச்சையும் உண்டாக்கி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் நிதியை ஐரோப்பிய பணக் கஜானாவாக மாற்றுவதே ஜனாதிபதி மக்ரோனின் திட்டம்.
“அவரது திட்டம் மிகவும் ஆபத்தானது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பொருளாதார வலயமாக ஒன்றிணைப்பதை நாம் எதிர்க்கிறோம்,” என்று ஜெர்மனியின் 154 பொருளாதார விற்பன்னர்கள் ஒன்றிணைந்து அத்திட்டத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
பிரெஞ்சு ஜனாதிபதியின் எண்ணத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஷோன் கிளௌட் ஷுங்கர் ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், ஜெர்மனிய அரசியல் தலைமையிலிருந்து எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கவில்லை.