வடமராட்சி வலய புதிய கல்விப் பணிப்பார் திருமதி அபிராமி பார்த்தீபன்
வடமராட்சி வலய புதிய கல்விப்பணிப்பாராக
திருமதி அபிராமி பார்த்தீபன் இன்று பதவியேற்றுள்ளார்.
கல்வியல் நிர்வாகத் துறையின் உயர் தகுதி நிலைகளோடு அவர் தனது நியமனத்தை கடந்த 30ம் திகதி பெற்றிருந்தார். அதனைத்தொடர்ந்து இன்று கல்விவலய உத்தியோகத்தர்கள்,கல்வியல் துறை சார்ந்தவர்கள் மற்றும் முன்னாள் வலய கல்வி பணிப்பாளர் உட்பட பலர் முன்னிலையில் தன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.கல்வியல் நிர்வாகத் துறைகளில் உயர்பதவிகளை வகித்தவரும் முன்னாள் மாகாணக் கல்விப் பனிப்பாளரும் வடமராட்சி வலய முன்னாள் கல்விப்பணிப்பாளருமாகிய திரு வயிரமுத்து செல்வராஜா அவர்களும் புதிய கல்விப்பணிப்பாளரின் பதவியேற்றல் நிகழ்வுக்கு சமூகம் கொடுத்து அவற்றிற்கான வாழ்த்துரையினை வழங்கியிருந்தார்.அவரோடு இணைந்து தென்மராட்சி கல்விப்பணிப்பாளர் திரு.கிருபாகரன்,ஒய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் றவீந்திரன் மற்றும் ஒய்வுபெற்ற அதிபர் இராகவன் ஆகியோரும் வாழ்த்துரைகளை வழங்கினர்
அவரோடு திருமதி அபிராமி பார்த்தீபன் தனது முதல் நியமனத்தை சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தராக ஆரம்பித்திருந்தார்.
கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் சாதனைக்குரிய மாணவராக திகழ்ந்த பழைய மாணவரான புதிய கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாணத்தில் கரணவாய் என்ற கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.இவரின் தந்தையார் திரு சுவாமிநாதன் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாண சபையில் செயலாளராக உயர்பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்தும் உயர்நிலைகள் அடைந்து எம் மக்களுக்கு பல சேவைகளாற்ற வெற்றிநடை இணையத்தளம் வாழ்த்துக்களை பகிர்கிறது.