மில்லியன் பேருக்கும் அதிகமாகப் பங்கெடுக்கும் திருவிழாவில் சுமார் 400,000 பேர் பங்கெடுத்தனர்.
தென்கிழக்காசியாவிலேயே அதிக கொவிட் 19 தொற்றுக்களைக் கொண்ட பிலிப்பைன்ஸில் அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறித் தமது புனிதரின் திருவிழாவில் 400,000 க்கும் அதிகமானவர்கள் பங்கெடுத்தனர்.
கறுப்பு நஸரேன் என்ற கிறீஸ்துவின் மரணப் வழியைச் சித்தரிக்கும் ஒரு சிலைக்காக ஜனவரி 09 திகதியன்று கொண்டாடப்படும் திருவிழாவே பிலிப்பைன்ஸில் மிகவும் பெரிய திருவிழாவாகும். 1,600 களில் மெக்ஸிகோவிலிருந்து கொண்டுவரப்பட்ட இச்சுரூபத்திற்கு விசேட சக்தியிருப்பதாகப் பிலிப்பைன்ஸ் நாட்டுக் கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள். இச்சுரூபம் மெக்ஸிகோவிலிருந்து கப்பலில் எடுத்துவரப்பட்டபோது கப்பலில் உண்டாகிய தீவிபத்தில் அகப்பட்டுக் கருநிறமாகிவிட்டதால் அதன் பெயர் கறுப்பு நஸரேன் என்றாகியது.
“இவ்வருட விழாவை வீட்டிலிருந்து தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டாடுங்கள்,” என்ற மருத்துவ அதிகாரிகளின் வேண்டுகோளைச் செவிமடுக்காமல் குவாப்போ என்ற நகரப்பகுதியிலிருந்த அந்த தேவாலயத்துக்குப் படையெடுத்த விசுவாசிகள் கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளான முகக்கவசமணிதல், இடைவெளி பேணுதல் ஆகியவற்றைப் பின்பற்றி தேவாலயத்தின் வெளியே அதிகாலை 04 மணியிலிருந்தே காத்திருந்தார்கள். அவர்களை ஒவ்வொரு தடவையும் 400 பேர்களாகத் தேவாலயத்துக்கு பொலிஸார் அனுமதித்தார்கள்.
தேவாலயப் பெருநாள் அசம்பாவிதமில்லாமல் நடந்தேறியதாக மணிலா பொலீசார் தெரிவிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்