காலநிலை மாற்றங்களின் விளைவால் தென்னிந்தியப் பிராந்தியங்களில் அதிக மழையும் வெள்ளமும் உண்டாகலாம்.
காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பூமத்திய ரேகையை ஒட்டியிருந்த பிராந்தியங்களில் இதுவரை இருந்த மழைப்படலத்தை ஓரளவு நகர்த்தியிருப்பதால் எதிர்காலத்தில் இந்தியாவின் தென்பாகங்கள் கடும் மழையையும் அதனால் வெள்ளப்பெருக்குகளையும் எதிர்நோக்கும் அபாயமுண்டு.
சுற்றுப்புற சூழல் மாசுபடுத்தல் இந்திய மாநிலங்கள் மீதான பருவ நிலையையும், காலநிலையையும் எப்படி மாற்றக்கூடுமென்று இதுவரை உண்டாகிய மாற்றங்கள் தொடரும் என்ற அனுமானத்தில் உண்டாக்கப்பட்ட கணிப்பை வைத்துச் செய்யப்பட்ட ஆராய்வுகளின்படி கிழக்கு ஆபிரிக்கா, இந்து சமுத்திரம் ஆகியவை மீது இருக்கும் பலமான மழைப்படலம் வடக்கு நோக்கி நகர்த்தப்படும் என்று தெரிகிறது.
இந்த மாற்றம் உலக நாடுகளின் உணவுத் தயாரிப்பு, தாவரவியல் வித்தியாசங்கள் போன்றவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும். வட அத்திலாந்திக் சமுத்திரத்தின் மீதிருந்தும், ஆசியாவின் மீதிருந்தும் எழும் வெவ்வேறு அளவுள்ள வெம்மையான காற்றே இந்த விளைவுக்குக் காரணமென்கிறது அந்த ஆராய்ச்சி.
இந்த ஆராய்ச்சி முன்னர் செய்யப்பட்டவைகளை விட அதிக விபரங்களுடனும், எதிர்காலத்தைப் பற்றிய வெவ்வேறு கணிப்பீடுகளையும் சேர்த்து ஆராயப்பட்டிருக்கிறது என்கிறார்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்