ஸெரும் இன்ஸ்டிடியூட் இந்தியாவில் pfizer/biontech தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் எண்ணம் இல்லை.
Pfizer நிறுவனத்துடன் கூட்டுச்சேர்ந்து தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்கிறது ஸெரும் இன்ஸ்டிடியூட். காரணம் அதன் தடுப்பு மருந்துகளை மிகவும் அதிக குளிர் நிலையில் பாதுகாக்கவேண்டும் என்பதாலும், அது இன்னும் இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத தடுப்பு மருந்தாக இருப்பதாலுமாகும்.
இந்தியாவில் பாவனைக்கான முதல் முதலில் அனுமதியைக் கேட்ட நிறுவனமான Pfizer க்கு அது இன்னும் கிடைக்கவில்லை. அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்ட சந்திப்புகளுக்கு வராததே காரணம் என்கிறது இந்தியா.
Pfizer நிறுவனத்துக்கும் இந்தியாவுக்கும் அவ்விடயத்தில் கருத்து வேறுபாட்டுச் சிக்கல் உண்டாகியிருக்கிறது. அந்தத் தடுப்பு மருந்தை இந்தியாவில் பரீட்சைக்கு உள்ளாக்கவேண்டுமென்கிறது இந்தியா. தனது மருந்தை இந்தியாவுக்குப் பரீட்சைக்கு அனுப்புவதானால் அவர்கள் குறிப்பிட்ட தொகையை முதலில் வாங்க ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டுமென்கிறது pfizers/biontech நிறுவனம்.
அத்துடன் தனது தடுப்பு மருந்துகளின் விலையை உயர்த்துவதாக அந்த நிறுவனம் 26.01 செவ்வாயன்று அறிவித்திருக்கிறது. அவர்கள் அனுப்பும் போத்தல்களிலிருக்கும் மருந்து 5 தடுப்பூசிகளுக்குப் போதுமானது என்று கணிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது 6 பேருக்குப் பாவிக்கக்கூடும் என்று தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்