சவூதியில் இனி இராணுவத்திலும் பெண்கள்
சவூதியில் ஆண்களைப் போலவே எல்லா செயல்பாடுகளிலும் பெண்கள் ஈடுபடுவதற்கு இருந்த தடைகள் யாவும் ஒவ்வொன்றாக தளர்த்தப்பட்டு வருகிறது.முன்னைய அரசின் பழமைவாத சிந்தனைகளிலிருந்து இன்றைய இளவரசர் சல்மான் பல மாற்றங்களை மிகவேகமாக ஏற்படுத்துவது அவதானிக்கமுடிகிறது.
பெண்களுக்கான வாகன ஓட்டுனர் உரிமம்,விளையாட்டு போட்டிகளில் மைதானங்களில் பங்குபெறும் உரிமம் என படிப்படியான மாற்றங்களை ஏற்படுத்தி தற்போது இராணுவத்தில் இணைவதற்கான விண்ணப்பிக்க கோரப்பட்டுள்ளது. டிப்ளோமா குறைந்த தகுதியாக கோரப்பட்டுள்ள அதேவேளையில் 25 முதல் 35 வரையான வயதுடையவராகவும் கணவன் அதே மாகாணத்தில் பணி செய்பவராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.