டிரம்பைச் சந்திக்கவிருக்கும் முதலாவது ஆபிரிக்கத் தலைவர்
முதன் முதலாக டிரம்ப்பைச் சந்திக்கும் ஆபிரிக்கத் தலைவராகவிருக்கிறார் நைஜீரியாவின் ஜனாதிபது முஹம்மது புஹாரி. ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஆபிரிக்க நாடுகளை மிகவும் மோசமாகக் குறிப்பிட்டபின் திங்களன்று நடக்கவிருக்கும் அச்சந்திப்பை உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றன.
அத்துடன் நைஜீரியாவுக்கு விஜயம் செய்த சமயத்தில்தான் வெளிநாட்டமைச்சர் ரெக்ஸ் தில்லர்ஸன் பதவி டிரம்பினால் பறிக்கப்பட்டது என்பதாலும் ஆபிரிக்காவுடன் டிரம்ப் எப்படியான உறவை உண்டாக்கவிரும்புகிறார் என்பது இதுவரை வெளியாகவில்லை.
பொக்கோ ஹராம் என்ற தீவிரவாதிகளுடன் உக்கிரமான போரில் இருக்கும் நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. அரசியல், பொருளாதாரம் மற்றும் தீவிரவாதிகளுடனான போர்கள் பற்றியே அச்சந்திப்பு இருக்கும் என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை.