ஸ்பெயின் நகரொன்று குளிரில் சரித்திரம் படைக்கிறது.
ஸ்பெயினின் வடமேற்கில் சுமார் 1,800 மீற்றர் உயரமுள்ள பிராந்தியத்திய நகரான இல் வியாழனன்று -35.7ºC குளிர் அங்குள்ள காலநிலை நிலையத்தில் அளக்கப்பட்டிருக்கிறது. இது புதனன்று ஸ்பெயினில் கிழக்கு பிரனீயர் பிராந்தியத்தில் செவ்வாயன்று குளிரில் சரித்திரம் படைத்த -34.1ºC ஐ விட சிறிது அதிகமானதாகும்.
ஸ்பெயின் நகரொன்று குளிரில் சரித்திரம் படைக்கிறது.
ஸ்பெயினின் வடமேற்கில் சுமார் 1,800 மீற்றர் உயரமுள்ள Vega de Liordes பிராந்தியத்திய நகரான இல் வியாழனன்று -35.7ºC குளிர் அங்குள்ள காலநிலை நிலையத்தில் அளக்கப்பட்டிருக்கிறது. இது புதனன்று ஸ்பெயினில் கிழக்கு பிரனீயர் பிராந்தியத்தில் செவ்வாயன்று குளிரில் சரித்திரம் படைத்த -34.1ºC ஐ விட சிறிது அதிகமானதாகும். இந்தக் காலநிலையில் கொதிநீரை வெளியே எறியும்போது அது உடனே உறைபனியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் தற்போது பிலோமினா என்ற சூறாவளியால் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பல பிராந்தியங்களில் 200 மீற்றர் உயரமுள்ள பகுதிகளிலேயே நிறைய உறைபனி விழுமென்று காலநிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது.
பிரான்ஸ் குளிர் சாதனை -36.7ºC ஆகும், சுவிஸில் -41.8ºC பிரிட்டனில் -27.2ºC ஆகும்.
இந்தக் குளிரானது ரஷ்யாவில் 1978 டிசம்பர் 31 இல் உஷ்ட் ஷுகொர் நகரில் பதியப்பட்ட -58.1ºC க்கு ஈடானதல்ல. அதுவே ஐரோப்பாவில் இதுவரை அளக்கப்பட அதிகுளிர் ஆகும்.
வடதுருவத்தில் பதியப்பட்ட அதி குளிர் கிரீன்லாந்தில் 18991 டிசம்பர் 22 இல் பதியப்பட்ட -69.3ºC ஆகும். இது 1983 இல் அண்டார்டிகாவிலிருக்கும் உயரமான பிரதேசத்தில் பதியப்பட்ட குளிர் நிலையை விட 20 ºC அதிகமானதாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்