அன்னாசி இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட நார் காற்றாடி விமானங்களைச் செய்ய உதவுகின்றன.
பல பாவனைகளுக்கும் உதவும் டிரோன் என்றழைக்கப்படும் சிறிய காற்றாடி விமானங்களின் பெரும்பாலான பாகங்களை அன்னாசி இலையிலிருந்து எடுக்கப்பட நார்கள் மூலம் தயாரிப்பதில் மலேசிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள்.
வீணாகக் குப்பையாக்குப்படும் அன்னாசி இலைகளைப் பாவிப்பதுடன் பாவிக்கப்பட்ட காற்றாடி விமானங்கள் சுற்றுப்புற சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தாமலிருக்கவும் இந்த ஆராய்ச்சியின் வெற்றி பயன்படுகிறது. தயாரிக்கப்பட்ட இந்தக் காற்றாடி விமானங்கள் 1,000 மீற்றர் உயரத்தில் பறக்கக்கூடியதாக இருக்கின்றன அவை வான்வெளியில் 20 நிமிடங்கள் பறந்துகொண்டிருந்தன.
மலேசியாவில் அன்னாசித் தோட்டங்கள் செய்யும் விவசாயிகளின் உதவிக்காக ஆரம்பிக்கப்பட்ட புத்ரா பல்கலைக்கழகத் திட்டத்தை முஹம்மது தாரிக் ஹமீத் சுல்தான் என்ற பொறியியலாளர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்