பனிக்காலப்புயல் பிலோமினா ஸ்பெயினைக் குளிரால் வதைக்கிறாள்.

ஸ்பெயினின் காலநிலை அவதானிப்பு நிலையம் எச்சரித்ததைப் போலவே தலைநகரான மட்ரிட் உட்படப் பல பிராந்தியங்களைக் கடும் குளிர் கவ்வியிருப்பதுடன் உறைபனியும் கடுமையாகத் தாக்கிவருகிறது. 

ஸ்பெயினின் பல பகுதிகள் – 30 பாகை செஸ்சியல் குளிருக்குள் அகப்பட்டிருக்கிறது. மாட்ரிட் நகரம் சனியன்று கடும் பனிப்புயலால் தாக்கப்படுகிறது – 0 குளிருடன் அரை மீற்றர் உயர உறைபனி கொட்டியிருக்கிறது. வீதிகளில் உறைபனியை அகற்ற அவகாசமில்லாததால் போக்குவரத்து ஸ்தம்பித்துப் பலரும் ஆங்காங்கே தங்களது வாகனத்துக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். செஞ்சிலுவைச்சங்கம் அவர்களுக்கு உணவு உட்பட்ட அவசர உதவிகளைச் செய்வதில் ஈடுபட்டிருக்கிறது.

https://vetrinadai.com/news/spain-coldest-record/

வெள்ளியன்று முதலே ஸ்பெயினின் விமானப் போக்குவரத்தும் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. மாட்ரிட் விமான நிலயைப் போக்குவரத்து செயற்படுவது அடிக்கடி நிறுத்தப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *