கொரோனாக் கிருமிகளால் அதிகமாக ஆண்களே உயிரிழக்கிறார்கள்.

கொவிட் 19 எதற்காகப் பெரும்பாலும் ஆண்களையே கடுமையாகப் பாதிக்கிறது, உயிரிழக்க வைக்கிறது என்பதற்குப் பல்வேறு பதில்கள் சொல்லப்பட்டாலும் அது உண்மையே என்பதற்கான சான்றுகள் கடந்தவருட இறப்புகளின் எண்ணிக்கையில் தெரியவருகின்றன.

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு அவசரகாலச் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை விபரங்களும், இறப்பவர்களின் எண்ணிக்கை விபரங்களும் ஆண்கள் இவ்வியாதிக்குப் பலவீனமானவர்கள் என்பதைக் காட்டுகிறது. 1997 இன் பின்னர் சுவீடன் நாட்டில் இறந்தவர்களில் அதிகமாக ஆண்களாக இருப்பது 2020 இல் தான். சுவீடனில் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு அவசரகாலச் சிகிச்சை பெற்றவர்களில் 72 விகிதமானவர்கள் ஆண்களே. ஜேர்மனியின் கணக்குகள் இவ்வியாதியால் ஆண்கள் பெண்களைவிட 62 விகிதம் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது.

மொத்தமான இறப்பு எண்ணிக்கைகளில் 2020 ம் ஆண்டில் சுவீடனில் இறந்தவர்கள் எண்ணிக்கை 150 வருடங்களில் இல்லாத அளவு அதிகமாகும். மற்றைய வருடங்களை விடச் 10 விகிதம்  சராசரி அதிகமான பேர் 2020 இல் இறந்திருக்கிறார்கள். சுவீடனின் மக்கள் தொகை அதிகரிப்பில் 50 விகிதத்தை கொவிட் 19 விழுங்கியிருக்கிறது. பிறப்பு, இறப்புக் கணக்குகளின்படி 2019 முதல் பாதியில் இல் 51,004 பேரால் அதிகரித்த மக்கள் தொகை 2020 இன் அதே முதல் ஆறு மாதங்களில் வெறும் 24, 801 ஆகியிருக்கிறது. கொவிட் 19 இறப்புக்கள் பல உயிர்களைக் குடித்த அதே சமயம் நாட்டில் 2020 ம் ஆண்டில் குடியேற்றங்களும் குறைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவேண்டும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *