விமானச் சிதைவுகள், உடற்பாகங்கள் மீட்பு! ஆழ் கடலில் கறுப்புப்பெட்டிகள்!

ஜாவா கடலில் வீழ்ந்த இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் மற்றும் மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டுவருகின்றன.

https://vetrinadai.com/news/indonesia-sriwijaya-airlines-accident/

குழந்தை ஒன்றின் உள்ளாடை, விமானத்தின் சக்கரம் என்பன உட்பட ஐந்து பொதிகளில் சிதைவுகள், உடற்பாகங்கள் ஜக்கார்த்தாவின் பிரதான துறைமுகத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.கடலில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள், கடற்படைக் கப்பல்கள், ஹெலிகள் சகிதம் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

விமானத்தின் தகவல் பதிவு கருவிகள் (black box recorders) கிடக்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவை சிதைவுகளோடு ஆழ் கடலில் கிடக்கலாம் என்ற சந்தேகத்தை சில சமிக்ஞைகள் காட்டியுள்ளன. கடற்படை சுழியோடிகள் அவற்றை மீட்டெடுக்க முயன்று வருகின்றனர்.

“சிறிவிஜாயா” விமான நிறுவனத்தின் “போயிங் 737” ரக விமானத்தின் விபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை. ஜக்கார்த்தா விமான நிலையத்தில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட 12 நிமிடங்களில் விமானம் தரைத் தொடர்பை இழந்து காணாமற் போயிருந்தது.

விமானத்தில் ஒரு குழந்தை, பத்து சிறுவர்கள் உட்பட ஐம்பது பயணிகளும் 12 பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தோனேசிய ர்கள் ஆவர். எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று நம்பப்படுகிறது

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *