சந்தியாகோ மிருகக்காட்சிசாலை கொரில்லாக்கள் இரண்டு கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ஜனவரி 6 ம் திகதி சந்தியாகோவிலிருக்கும் மிருகக்காட்சிசாலையின் திறந்தவெளியில் வாழும் இரண்டு மனிதக் குரங்குகள் இரும ஆரம்பித்தன. தற்போதைய நிலைமையில் அப்படியான சுகவீனங்களுக்கு கொவிட் 19 பரீட்சை செய்யப்படுவது போலவே அவைகளுக்கும் செய்யப்பட்டன.
அதன் பதிலாக அவ்விரண்டு மனிதக் குரங்குகளுக்கும் கொவிட் 19 தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் தனிமைப்படுத்தப்பட்டன. அந்த மிருகக்காட்சிசாலையில் வேலைசெய்யும் ஊழியர்களில் வெளியே அடையாளங் காணாத தொற்று இருந்து அதன் மூலமே அவ்விரண்டு கொரில்லாக்களிலும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது.
மனிதக் குரங்குகள் குடும்பங்களாக வாழ்வதால் அவ்விரண்டு மனிதக் குரங்குகளின் மற்றைய குடும்ப அங்கத்தினருக்கும் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு என்ற எண்ணத்தில் அவைகளெல்லாம் கவனமாகக் கண்காணிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இவையிரண்டும் அழிந்துவரும் இனமொன்றைச் சார்ந்த மனிதக் குரங்குகளாகும்.
குரங்குகளுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டது முதல் முறையாக இப்போதுதான் காணப்பட்டிருக்கிறது. அவ்விரண்டு மனிதக் குரங்குகளும் இருமலால் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வேறெந்தச் சுகவீனத்தையும் அவை காட்டவில்லை என்று மிருகக்காட்சிசாலை அறிவிப்புச் செய்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்