பிரிட்டன் இலவசமாகக் கொடுக்கும் உணவின் தரம் பற்றிப் பெரும் கண்டனம்.

பிரிட்டிஷ் பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலைமையில் வாரத்துக்கு ஐந்து நேரச் சத்துணவு அவரவர் வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து தருவதாக அரசு அறிவித்திருந்தது. திட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பல விமர்சனங்களுக்கு உள்ளான இத்திட்டம் பிரபல உதைபந்தாட்ட வீரர் மார்க்கஸ் ரஷ்போர்ட் பிரிட்டிஷ் மக்களை இந்தத் திட்டத்துக்காகக் குரல்கொடுக்கும்படி வேண்டிக்கொண்டதன் பின்னரே பிரதமரால் அறிவிக்கப்பட்டது.

ஜனவரியில் கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்ட பாடசாலைகளை மூடிவிடும் திட்டத்தால் பாடசாலை மாணவர்களுக்கு உணவுப்பொதிகள் கொடுக்கும் திட்டத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டன. எப்போதுமே ஒரு வார காலத்துக்கு முன்னர் மாணவர்களுக்கான உணவைத் தருவித்துத் தயாராக இருக்கும் வழமை இருந்ததால் பல மில்லியன் உணவுப்பொதிகள் குப்பைகளாகின.

https://vetrinadai.com/news/british-schools-food-waste-lockdown/

இன்னொரு பக்கத்தில் அவசரமாக வீட்டுக்கு வீடு அனுப்பப்படவேண்டிய உணவுப்பொதிகளுக்கான திட்டம் உண்டாக்கப்பட்டதால் அந்த உணவுப்பொதிகளின் தரம் கண்காணிக்கப்படவில்லை. உணவு பொட்டலம் பெறும் ஒரு தாயார் தனது பிள்ளைக்காக, தான் ஐந்து வேளை உணவுக்காகப் பெற்றுக்கொண்ட உணவுப்பொதிக்குள் இருந்தவைகளைப் படமெடுத்துச் சமூகவலைத்தளமொன்றில் பிரசுரிக்கவே, அவ்விடயம் நாடு முழுவதும் எதிரொலித்தது.  

படத்திலிருக்கும் இரண்டு வாழைப்பழங்கள், கிழங்குகள், ஒரு தக்காளி மற்றும் பொருட்களாலான உணவுப்பொதி அவற்றைப் பெற்றுக்கொள்பவரை அவமானப்படுத்துவது போன்றதாகிறது என்று குறிப்பிடப்பட்டு அது பாராளுமன்றத்திலும் சுட்டிக்காட்டப்பட்டது. நடந்ததுக்காக மனவருத்தம் தெரிவித்திருக்கும் போரிஸ் ஜோன்சன் உடனடியாக அவ்விடயத்தைச் சரிசெய்வதாக உறுதியளித்திருக்கிறார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *