ஆரி அர்ஜூனனின் வெற்றிக் கொண்டாட்ட அழைப்பு
அண்மையில் இவரின் பெரு வெற்றி பொதுவெளியில் பலராலும் பேசப்பட்டதொன்று.
நேர்மையுடன் கருத்துமோதல்களை போட்டியின் உள்ளே ஆணித்தரமாக முன்வைத்ததும், விளையாட்டில் பங்குபற்றிய பலராலும் உள்ளுக்குள்ளே குறி வைத்து தாக்கப்பட அல்லது ஒதுக்கப்பட, மக்களின் வாக்குகளால் அவர் நேர்மைக்காக காப்பாற்றப்பட்டு போட்டியில் தக்கவைக்கப்பட்டார் என்பதும் இவரின் பெரு வெற்றிக்கான மிக முக்கியமாக பேசப்படும் காரணங்களாகும்.
அவர் தான் இந்த ஆரி அர்ஜுனன்
இந்த நுணுக்கங்களை அவர் அந்தவிளையாட்டுக்கான யுக்தியாக மட்டும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், பல்வேறு கருத்துப்பகிர்வுகள் பகிரப்பட்டிருந்தன என்பதும் உண்மையான தான்.
ஆனால் அந்த வெற்றிக்குப்பின் அவர் தன் ரசிகர்களுக்கு வெளியிட்டிருக்கும் ஒளிப்பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து,
அது பற்றியும் பலரை பேச வைத்திருக்கிறது.
காரணம், அந்த போட்டியின் அடுத்த அடுத்த நிலைகளில் வந்த ஒரு சிலரின் கொண்டாட்டங்கள் வீதியெங்கும் கொண்டாட ,
முதலிடத்தைப் பெற்ற ஆரி அர்ஜுனனின் கொண்டாட்டத்துக்கான அழைப்பு மட்டும், சமூக நலன் சார்ந்த சிந்தனையோடு அவர் அழைத்திருப்பது தான் இதற்கு காரணம்.
ஆரி அர்ஜுனனின் இந்த வெற்றியும் அவரின் செயற்பாடுகளும் , ஏற்கனவே அவர் செயற்பட்ட சமூக நலன் சார் ஈடுபாடுகளை இன்னும் வீரியமாக எடுத்துச் செல்லும் என்பதை எதிர்காலத்தில் இன்னும் எதிரபார்க்கலாம் போலிருக்கிறது.