திருமணமான பெண்களிடம் இப்படி கேட்பது சரியா ?

“உங்களுக்கு இன்னும் விஷேசம் இல்லையா ?” திருமணம் முடித்தாலே பெண்களிடம் கேட்கும் கேள்வியே இதுதான் . கருக்கட்டல் நிகழ்வதற்கு முக்கியமான கதாபாத்திரம் பெண் மட்டும்தான் என்றும் இன்றும் கூட சமூகம் நம்பிக்கொண்டிக்கின்றது. எல்லா விடையங்களிலும் பெண்களுக்குதான் அதிக கேள்வி என்பது போல கர்ப்பம் என்ற விடையத்திலும் அன்று தொடக்கம் இன்று வரை பெண்ணிடம் அதிக கேள்விகள். கர்ப்பம் அடைவதற்தற்கு எந்த ஒரு உயிரனத்திலும் முக்கிய இரு கதாபாத்திரங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.

1.ஆண்
2.பெண்
மனிதனிலும் இதேபோல தான். ஆனால் மனித சமூகம் கர்ப்பம் அடைவதிலே 100% பெண்களின் செல்வாக்கு என்றுதான் நம்பிக்கொண்டிக்கின்றது . ஏனென்றால்
திருமணம் நிகழ்ந்தது ஒரு மாத காலத்திலோ அல்லது நாற்பது நாட்களிலோ
பெண்களிடம் கேட்கும் கேள்வி…
♦️ #உங்களுக்கு விஷேசம் இல்லையா ?
♦️ செக் பண்ண போகவில்லையா ?
♦️இன்னும் நிக்கவில்லையா? ( மாதவிடாய் )

இது போன்ற பல கேள்விகளை கேட்டு மனதை புண்படுத்துகிறார்கள்.
⭕பெண்ணுடைய (முட்டை ) இனப்பெருக்க செயற்பாடுகள் அதாவது
1 பெண்ணுடை முட்டை
2.ஆணுடைய விந்து
இது இரண்டும் தான் கர்ப்பமாகுவதற்கு துணைபுரிகின்றன முக்கிய விடையங்கள்.
ஆனால் சமூகத்தின் பார்வை (இந்த முட்டையின் மேலே மாத்திரம்) அதாவது கர்ப்பமாக

♦️ முட்டையின் வளர்ச்சி , மலட்டுத்தன்மை , இனப்பெருக்க உறுப்புக்களின் வளர்ச்சி என பெண்களில் செல்வாக்கு செலுத்துகிறது.

♦️ஆண்களின் விந்தணு உற்பத்தி , விருத்தி , வளர்ச்சி
மலட்டுத்தன்மை , விந்தணுவின் வேகம் என்பன செல்வாக்கு செலுத்துகின்றன.

இதில் பெண்களை மட்டும் ஆராய்ச்சி செய்கிறார்கள் மாத்திரமே தவிர ஆண்களின் இனப்பெருக்க விடையத்தில் யாரும் ஆராய்ச்சி செய்வதில்லை.

சமூகத்தில் காணப்படும் பெரும்பாலான மக்கள் கர்ப்பாமாக விட்டாலே பெண்களுக்கும் தான் குறைசொல்லுவார்கள் , கேள்வி கேட்பார்கள், திருமணத்திற்கு பின் அவளை இவ்வாற கேள்விகளை வைத்தே மனதை சோர்வடையச்செய்வார்கள்.

இன்னொரு விடையத்தையும் இந்த பதிவிலே பதிவிடுகிறேன்.

கர்ப்பம் தரிக்க தாம்பதிகளினுள்ளே பல காரணங்களை வைத்து பிற்போடுவார்கள். அல்லது கர்ப்பம் தரிக்காமலும் இருக்கவும் பல காரணங்கள் உள்ளன.

1.திட்டமிடல்கள்
2.படிப்பு
3.பொருளாதாரம்
4.தொழில்
5.எதிர்காலச் செயற்பாடுகள்.
6.கனவுகள்
7.உடல் குறைபாடுகள்
8.நோய்கள்
9.குடும்ப நிலவரம்
10.விருப்பமின்மை

இவ்வாறன பல காரணங்கள் உள்ளன.

கர்ப்பமடைய எல்லா உயிர்களிலும் ஆண் பெண் இரு உயிர்களின் வளர்ச்சியிலும் செல்வாக்கு செலுத்துகின்றன.

எழுதுவது : பஹ்ரியா பாயிஸ், சிறீலங்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *