உள்ளே மாட்டிக்கொண்ட சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
எதிர்பார்த்ததை விட முன்னதாகவே 500 மீற்றர் ஆழத்தில் மாட்டிக்கொண்டிருந்த சீனாவின் சுரங்கத் தொழிலாளர்களில் பாதிப்பேரை உதவிப்படை மீட்டெடுத்தது. முதலாவதாக வெளியே எடுக்கப்படுபவரை இயந்திரம் மூலம் வெளியே தூக்கிப் போர்வைகளுக்குள் மூடிச் சிகிச்சைக்குக் கொண்டு செல்வதை அரச தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது.
“எதிர்பாராதவிதமாக முதல் படலங்களைத் தோண்டியெடுத்தபின் பெரிய இடைவெளியை நாம் சந்திக்க முடிந்தது. அதனால் அதிர்ஷ்டவசமாக எமது காப்பாற்றும் படையால் 11 பேரை எதிர்பார்த்ததை விட ஒரு வாரத்துக்கும் முன்னதாகவே மீட்க முடிந்தது,” என்று காப்பாற்றும் சேவையினருக்குப் பொறுப்பான ஒரு அதிகாரி சந்தோசத்துடன் தெரிவித்தார்.
உள்ளே அகப்பட்டுக்கொண்டவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்பது ஏற்கனவே தெரிந்தது. தவிர 12 வது நபருடன் வெளியே இருப்பவர்கள் தொடர்பிலிருக்கிறார்கள். அவரைக் காப்பாற்றுவது அடுத்த நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 11 பேருடன் இதுவரை எவ்வித தொடர்புகளும் கொள்ள முடியவில்லையென்பதால் அவர்களது நிலைமை பற்றி எதுவும் தெரியவில்லை. சாள்ஸ் ஜெ. போமன்