வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முதல் டிரம்ப் நடாத்திய ஒரு வீட்டு விசேசம்!
ஜனவரி 20 புதன் கிழமையன்று தான் டொனால்ட் டிரம்ப்பின் கடைசி வெள்ளை மாளிகை வாழ்நாள். அதற்கு முதல் நாள் டிப்பனி [Tiffany] தான் தனது விருப்பத்துக்குரிய 23 வயதான மைக்கல் பூலூஸுடன் மோதிரம் மாத்திக்கொண்டதாக அறிவித்தார். 1.2 மில்லியன் டொலர் பெறுமதியான நிச்சயதார்த்த மோதிரத்தை மைக்கள் பூலுஸ் கொடுத்ததாகத் தெரிகிறது. 27 வயதான டிப்பனி ஆரியானா டிரம்ப், இரண்டாவது மனைவி மார்லா மேப்பிள்ஸுக்குப் பிறந்த ஒரேயொரு மகள். டிரம்ப்பின் கடைக்குட்டி மகள்.
அமெரிக்காவில் டெக்ஸாஸில் பிறந்தாலும், பெரும்பாலும் தனது பால்ய வயதுகளை நைஜீரியாவில் கழித்த பூலூஸ் லெபனானைச் சேர்ந்தவர். பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர்களுடைய குடும்பத்துக்கு ஆபிரிக்க நாடுகளில் நிறையச் சொத்து இருக்கிறது.
நடிகர், வர்த்தகர் போன்று பல தொழில்களையும் தன்னுடையதாகக் குறிப்பிடும் மைக்கல் பூலுஸ் சொந்தமாக நிறுவனங்களை ஆரம்பிக்கும் திட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்