உலகப் போரின் பின்னர் மிகப்பெரும் மக்கள் தொகை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டது போலந்து.
2005 ம் ஆண்டுக்குப் பின்னர் மிகக்குறைந்த குழந்தைப் பிறப்புக்களை 2020 இல் சந்தித்த போலந்தில் இறப்புகளும் வழக்கமான வருடங்களை விட மிக அதிகமாகியிருக்கிறது. பொது முடக்கங்கள் நாட்டின் பிள்ளைப் பெறுதலை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்ததுக்குப் பதிலாக 357,400 மட்டுமே.
சுமார் 38 மில்லியன் குடித்தொகை உள்ள போலந்தில் கடந்த வருடம் வெவ்வேறு காரணங்களால் இறந்துபோனவர்களின் தொகை 486,200 ஆகும். மக்கள் தொகை வீழ்ச்சி 129,000 என்கிறது புள்ளிவிபரங்கள். அதற்கு முதல் வருடத்தில் மக்கள் தொகை 36,400 ஆல் குறைந்திருந்தது.
சுமார் கால் நூற்றாண்டாகவே போலந்தின் மக்கள் தொகை வருடாவருடம் குறைந்துகொண்டு வந்திருக்கிறது. அதிக சுபீட்சத்தை வேண்டிப் பணக்கார நாடுகளுக்குப் புலம்பெயரும் இளவயதினர் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
கடந்த வருடத்தில் கொரோனாப் பரவலால் இறப்பு அதிகமாயிருக்கிறது. போலந்தில் மிகவும் மோசமான பரவல் இருந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 60,400 இறப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதைத் தவிர 2020 ம் ஆண்டு முழுவதும் மாதாமாதம் சுமார் 30,000 பேர் இறந்திருக்கிறார்கள். 2021 ஆரம்பத்தில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்