14.2.2022 திங்கள் முதல் 20.2.2022 ஞாயிறு வரை வார ராசிப் பலன்
எழுதுவது : சோதிட வித்தகர் பரணிதரன்
மேஷம்
லாப ஸ்தானத்தில் சூரியன், குரு ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தினால் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள், குடும்பத்தில் லேசாக குழப்பம் இருக்கும். மனம் அலைபாயும், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனும் கேதுவும் மறைமுக விவகாரங்களில் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவார்கள்.
விநாயகப் பெருமானைத் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வாருங்கள். நன்மைகள் தோன்றும்.
ரிஷபம்
பத்தில் குருவும் சூரியனும் சஞ்சரிப்பதால் செய்கின்ற தொழிலில் அதிக முயற்சிகள் தேவைப்படும். மேலதிகாரிகள், முதலாளிகள் வகையில் ஆதாயம் இருக்காது, தவறான பழக்க வழக்கங்களால் சில சங்கடங்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும், வாரத்தின் முற்பகுதியில் வேலை பளு அதிகரிக்கும் பிற்பகுதியில் சந்தோஷமான மன நிலை உண்டாகும்.
துர்க்கையை செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வழிபட்டு வாருங்கள்.
மிதுனம்
பாக்கிய ஸ்தானத்து குருவும் சூரியனும் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார்கள், எதிர்ப்புகளை சமாளித்து நினைத்ததை நடத்திக்கொள்வீர்கள், உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும், மனதில் ஆசைகள் அதிகரிக்கும் அதைக் கட்டுப்படுத்துவதால் எதிர்வரும் சங்கடங்களில் இருந்து தப்பிக்கலாம்.
ஆலங்குடியானை மனதில் நினைத்து செயலில் இறங்குங்கள் யாவும் நலமாகும்.
கடகம்
ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சந்திரனால் புதன் கிழமை வரை மனதில் குழப்பங்கள் இருக்கும், அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது, குடும்பத்திற்குள் குழப்பம் இருக்கும், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு என்ற நிலை உண்டாகும், வியாழக்கிழமை முதல் ஓரளவிற்கு நன்மைகள் தோன்றும்.
வடவேங்கடத்தானை மனதில் எண்ணி செயல்படுங்கள் சங்கடங்கள் தீரும். அமைதி தோன்றும்.
சிம்மம்
உங்கள் ராசிநாதன் ஏழாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதுடன் குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால், புதிய சிந்தனை மேலோங்கும், அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நன்மையாகும், முதல் மூன்று நாட்கள் செலவுகள் அதிகரிக்கும், அதன் பிறகு மனதிற்குள் குழப்பங்கள் மேலோங்கும், அலைச்சல் அதிகரிக்கும், தாயாரின் உடல் நிலையில் பாதிப்பு தோன்றும்.
காலையில் கண் விழித்ததும் சூரியனை வணங்கி வேண்டி செயல்படுங்கள், நன்மைகள் அதிகரிக்கும்.
கன்னி
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரன் முதல் மூன்று நாட்களுக்கு வரவுகளை அதிகரிப்பார், அதன்பின் செலவுகள் தோன்றும், மூன்றில் உள்ள கேதுவால் தைரியம் துணிச்சல் இருக்கும், நினைத்ததை அடைவீர்கள்.
திருப்பதி ஏழுமலையானை மனதில் நினைத்து செயல்படுங்கள், யாவும் நன்மையாகும்.
துலாம்
குரு பகவானின் பார்வையால் நிறைவான பலன்களைக் காண்பீர்கள், இந்த வாரம் முழுவதும் சந்திரனின் நற்பலன்கள் தொடரும், சுக ஸ்தானத்தில் உள்ள சனி பகவான் உங்கள் தாயாரின் உடல் நிலையில் சங்கடத்தை உண்டாக்குவார், அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும், சகோதர வகையில் ஆதரவு கூடும்.
மகாலட்சுமியை வணங்கி வழிபட்டு வாருங்கள், மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம்
குடும்பத்திலும் மனதிலும் குழப்பம் நீடிக்கும், அலைச்சல் அதிகரித்தும் அதற்கேற்ற பலன் இல்லையே என்ற கவலை உண்டாகும். புதன் கிழமைவரை முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் இருக்கும், அதன் பிறகு சரியாகும்.
திருச்செந்தூர் முருகனை நினைத்து செயல்படுங்கள், தடைகள் அகலும், குழப்பங்கள் குறையும்.
தனுசு
திங்கள்கிழமை காலைமுதல் புதன்கிழமை மாலைவரை சந்திராஷ்டமம் என்பதால் எதிர்பாராத சங்கடங்கள், அலைச்சல், தடைகள் என்று உண்டாகும், அதன் பிறகு நிலைமை சரியாகும், குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் உள்ள சனிபகவான் உங்கள் வார்த்தைகளின் வழியாக வம்புகளைத் தோற்றுவிப்பார், விரைய கேதுவால் நிம்மதியான உறக்கம் என்பது இல்லாமல் போகும், யோசித்து செயல்படவேண்டிய வாரம்.
திங்களூரானை மனதில் வேண்டி செயல்படுங்கள், மனதில் நிம்மதி உண்டாகும்.
மகரம்
ஜென்ம சனியால் தொடர்ந்து சங்கடத்தை அனுபவித்து வரும் நிலையில் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் நன்மைகளைக் கண்டுவரும் உங்களுக்கு வாரத்தின் முதல் மூன்று நாட்களும் சந்தோஷமாகவே செல்லும், புதன் கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை இரவு வரையில் உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம், பழைய காரியங்களிலும் நிதானித்து செயல்படுங்கள், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் நன்மைகள் தென்படும்.
நவகிரகங்களில் உள்ள சனி பகவானை வணங்கி வழிபட்டு வாருங்கள், நிம்மதி தோன்றும்.
கும்பம்
ஜென்மத்தில் சூரியன், குரு என்பதால் உடல் நிலையிலும் மன நிலையிலும் சங்கடங்கள் உண்டாகும், திங்கள் கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு வரையில் சந்திரனால் சில அனுகூலங்கள் உண்டு, வெள்ளிக்கிழமை இரவுமுதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதிற்கு சங்கடம்தரும் சூழ்நிலைகள் உருவாகும்.
அம்பாளை வணங்கி வழிபட்டு வாருங்கள், சங்கடங்கள் விலகும்.
மீனம்
புதன்கிழமை மாலைவரை அனுகூலமற்ற நிலையே இருக்கும், வீண் செலவுகள், வேலையில் நெருக்கடி, பிள்ளைகளைப் பற்றிய சிந்தனை என்று மனதிற்குள் சங்கடங்கள் இருக்கும், அதன்பிறகு சந்திரனால் மனதில் மாறுதலும் மகிழ்ச்சியும் உண்டாகும், பத்தில் உள்ள செவ்வாயால் பணியில் சங்கடம் இருக்கும்.
துர்க்கையை வணங்கி வழிபட்டுவர சங்கடங்கள் விலகும். நன்மைகள் அதிகரிக்கும்