கப்பலில் மிதக்கும் மீன் வளர்க்கும் பண்ணையைப் பரீட்சிக்கிறது சீனா.
“Guoxin 1” என்ற பெயருடைய சீனாவின் மீன் பண்ணைக் கப்பலொன்று ஷடோங் மாவட்டத்தின் துறைமுகம் ஒன்றிலிருக்கும் தனது கன்னிப் பிரயாணத்தைத் தொடங்கியது. 100,000 தொன் எடையுள்ள அக்கப்பலில் 80,000 கியூபிக் மீற்றர் நீருக்குள் 15 மீன் பண்ணைகள் இருக்கின்றன. அது உலகக் கடலில் பயணித்தபடி வருடாவருடம் 4,000 தொன் எடை வரையான மீன் தயாரிப்பை எட்டும் என்று சீனா குறிப்பிடுகிறது.
சீன அரசின் மீன் பண்ணை நிறுவனத்தின் இந்தப் பண்ணைக் கப்பலில் நீருக்குக் கீழே உணரும், படங்களெடுக்கும் கமராக்கள் பொருத்தப்பட்டு மீன்களுக்குத் தேவையானபோது உணவு பரிமாறக்கூடிய வசதிகளும் இணைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. உலகிலேயே முதல் தடவையாகச் செய்யப்படும் இந்த மீன்பண்ணைக்கப்பல் முயற்சியில் விரைவில் 50 கப்பல்கள் சேர்ந்துகொள்ளும் என்கிறது சீனா.
சாள்ஸ் ஜெ. போமன்