ரயானை மொரொக்கோவில் மீட்க முடியவில்லை, ஹைதரை ஆப்கானிஸ்தானில் மீட்பார்களா?

மொரொக்கோவில் கிணறொன்றுக்குள் விழுந்துவிட்ட ரயான் என்ற பையனை மீட்கப் பலரும் பல நாடுகளாகப் போராடியும் அவனை உயிருடன் வெளியே கொண்டுவர முடியவில்லை. சர்வதேச ஊடகங்களின் இரக்கக் கவனத்தை ஈர்த்த அந்தச் சம்பவத்துக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தானில் அதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

ஹைதர் என்ற பெயருடைய ஐந்து வயதுச் சிறுவன் கிணறொன்றுக்குள் விழுந்திருக்கிறான். 45 மணி நேரமாகப் பலரும் அவனை அங்கிருந்து மீட்டெடுப்பதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் முயற்சி இன்னும் வெற்றியடையவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

25 மீற்றர் ஆழமான கிணறு ஒன்றுக்குள் சுமார் 10 மீற்றர் ஆழத்தில் சிறுவன் ஹைதர் மாட்டுப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஸாபுல் மாகாணத்தில் அந்த மீட்புப் பணி நடந்துவருகிறது. 

“எங்களுடைய முயற்சி வெற்றியடைவதற்குத் தொழில் நுட்பக் கருவிகள் தேவை,” என்ற கோரிக்கை சமூகவலைத்தளங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. மீட்புப் பணிகளுக்கு உதவ அம்புலன்ஸ், பிராணவாயும் மற்றும் கருவிகள் அனுப்பப்பட்டிருப்பதாக ஆப்கான் பிரதமரின் காரியதரிசி அப்துல்லா அஸாம் டுவீட்டியிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்