சவூதி அரேபியாவில் ரயில் சாரதி வேலைக்கு விண்ணப்பம் செய்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 28,000.

பெண்கள் கார்களையே ஓட்ட அனுமதிக்காத சவூதி அரேபிய அரசில் ரயில் சாரதிகளாகப் பணியாற்றப் பெண்களை விண்ணப்பிக்கும்படி அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக விண்ணப்பித்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை 28,000. ரயில் சாரதிகளுக்கான காலியிடங்களோ வெறும் 30 ஆகும்.

மெக்கா – மெதீனா நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவையை ஸ்பெயின் நிறுவனமொன்று கையாள்கிறது. சுமார் 80 ஆண்கள் பணிசெய்யும் அந்த நிறுவனம் மேலும் 50 ஆண்களைப் பயிற்றுவித்து வருகிறது. 

சவூதி அரேபிய சமூகத்தில் பெண்களுடைய பங்குபற்றுதலை அதிகரிப்பதில் சமீப காலத்தில் ஈடுபட்டு வரும் அரசுக்கு உதவுவதில் ஸ்பெயின் ரயில் நிறுவனமும் உதவ விரும்புகிறது. அவர்கள் ரயில் சாரதிகளாகத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதலில் ஒரு வருடத்துக்கு அதற்காகப் பயிற்சியிலும், கல்வியிலும் ஈடுபடுவார்கள். பணிக்காக விண்னப்பித்தவர்களில் பாதிப்பேருக்கு தேவையான ஆங்கில அறிவு இல்லாததால் அந்த நிறுவனம் ஒதுக்கிவிட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்