சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தின் விருது வழங்கும் விழா

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கம் சார்பாக உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, பல்வேறு சாதனைகள் புரிந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சேலம் மரவனேரியின் அருகில் அமைந்துள்ள மாதவம் என்ற மண்டபத்தின் முதலாவது மாடியில் உள்ள பாரதி அரங்கில் 27.02.2022 அன்று நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் விழாவுக்குச் சிறப்பு விருந்திரனராக நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள டிரினிட்டி கல்லூரியின் உயர்க்கல்வி இயக்குநர், கலைமாமணி முனைவர் பேராசிரியர் அரசுபரமேசுவரன் அவர்கள் கலந்துகொண்டார்.

அகவை முதிர்ந்தவர்களின் சங்கத் தலைவர் சென்னை நா. சுப்பையா அவர்கள் விழாவுக்கு முன்னிலை வகித்தார்.

விழாவுக்கான வரவேற்புரையைச் சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் பேராசிரியர் ப. கற்பகராமன் அவர்கள் வழங்கியதைத்தொடர்ந்து சங்கத்தின் அடுத்த ஓராண்டிற்கான செயல் திட்ட அறிக்கையை சேலம் மகிழம் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் கோ. பாக்கியராஜு அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து சங்கத்தின் நிதிநிலையறிக்கையை சேலம் மகிழம் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் அ. சதாம் உசேன் அவர்கள் வழங்கினார்.

அடுத்துசங்கத்தின் உறுப்பினர்களுக்கு சிறப்புச் செய்ததைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினரின் சிறப்புரை இடம்பெற்றிருந்தது.

தொடர்ந்து காலை 11.00 மணியளவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருத்தேர்வுகாகாக 270 விருதாளர்கள் விண்ணப்பித்திருந்தாலும் ஆய்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட 105 விருதாளர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுக்கு மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளிலிருந்தும் பல தமிழ் ஆர்வளர்கள் விண்ணப்பித்து விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.நல்லாசிரியர் விருது, சிறந்தபேராசிரியர் விருது, சிறந்த சமூக சேவகர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த தொழில் முனைவோர் விருது, பல்துறை வித்தகர் விருது என்ற வகையில் ஆறு வகையான விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.