கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பன்முக கலைப்பெருவிழா

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த வாரம்  பன்முக கலைப் பெருவிழா  மிகச்சிறப்பாக அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வை உலகத் தமிழர் பண்பாட்டுச்சங்கம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் 5000 க்கும் அதிகமான மக்கள் தமிழகத்தின் பல பாகங்களிலிலும் இருந்து வந்து கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நிறுவுநர் வெண்பா.இரா.பாக்கியலட்சுமி வரவேற்று பேசினார்.தலைவர்.கவிஞர்.மரிய டக்லஸ் , கவுரவத் தலைவர்.ப.இளங்கோ அவர்கள் தலைமையில் நபைபெற்ற இந்நிகழ்வை பொருளாளர்.இரா.பத்மநாபன்,இணைச் செயலாளர், கங்கா ஜகனாதன், அலுவலகச் செயலாளர் நித்யா சந்திரசேகர் , இளைஞரணித் தலைவர்.பைம்பொழில்.அருண்தாஸ் மணி, சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ,பி.இராசசேகர் , க.இராசசேகர்..காயத்ரி.,ஸ்டீபன் செல்வராஜ், நாமக்கல் செந்தில், செல்லப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 5000 க்கும் மேற்பட்டோர கலந்து கொண்டனர். சிலம்பம்..பறையிசை,பாரதம், திருக்குறளை நாட்டுப்புற பாடல் வடிவில் இசையமைத்து பாடிய நிகழ்ச்சி.. கணிதம்,தாண்டியாட்டம் ஓவியம்,கவிதை என 1500 கலைஞர்கள் பங்கேற்று அரங்கை கரவொலியில் அதிர வைத்தனர். வருகை தந்த ஆளுமைகளை மேள தாளத்தோடு வரவேற்றனர்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்.மாண்புமிகு.செஞ்சி .கே.எஸ்.மஸ்தான் அவர்கள் நிகழ்ச்சிகளை கண்டுகளித்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

பாரதிதாசன் பெயரன்.முனைவர்.கோ. பாரதி உலக சாதனை கவிதை நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.குளம் நிறையப் பூக்கள் என்னும் சங்கத்தின் தொகுப்பு நூலை பாரதியின் வம்சாவழி.உமாபாரதி அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழ்மகன் ப.இளங்கோ அவர்கள் எழுதிய காலாற நடக்கையிலே… வெண்பா.இரா .பாக்கியலட்சுமி எழுதிய அன்புள்ள ஆசான் போன்ற நூல்கள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பாவலர்.சரஸ்வதி பாஸ்கரன், சங்கர் கணேஷ் ,நாட்டுப்புற பாடகர் வேல் முருகன்.ஏர்வாடி இராதாகிருஷ்ணன் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *