மேமாதம் 6ம்திகதி TSSA UK இன் 31வது  உதைபந்தாட்டத் திருவிழா

ஐக்கிய இராச்சிய தமிழ்பாடசாலைகள் விளையாட்டு சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் உதைபந்தாட்டத்திருவிழா வரும் மேமாதம் 6ம் திகதி இடம்பெறவுள்ளது.


மேமாத முதல் வங்கி விடுமுறை நாளாகிய மே 6ம்திகதி  திங்கட்கிழமை காலை 9மணிமுதல் கோலாகலமாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தவருட உதைபந்தாட்டத் திருவிழா லண்டன் Epsom பகுதியில் அமைந்துள்ள Priest Hill Ground மைதானத்தில் இடம்பெறும்.

உதைபந்தாட்டப்போட்டிகளில் வயதெல்லையற்றோருக்கான திறந்தபோட்டிகளோடு ஏனைய வயதுப்பிரிவினருக்குமான போட்டிகளும் வழமைபோலவே இடம்பெறும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

உதைபந்தாட்டப்போட்டிகள் மட்டுமல்லாது  பெண்களுக்கான வலைப்பந்தாட்டம்,சிறியவருக்கான தடகளப்போட்டிகள்,மென்பந்து கிரிக்கெட், கரப்பந்தாட்டம் போன்ற போட்டிகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் அணிகள் வரும் ஏப்பிரல் மாதம்  27ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டும் என TSSA UK அமைப்பு அறிவித்துள்ளது.


லண்டனில் உதைபந்தாட்டத்தின்  முற்றுமுழுதான கோலாகல கொண்டாட்டமான இந்த உதைபந்தாட்ட திருவிழா, இந்தவருடமும் 31வது வருடக் கொண்டாட்டமாக  இடம்பெறும் என்பது பலமான எதிர்பார்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *