சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் திறந்துவைக்கப்பட்ட திறன் வகுப்பறை

யாழ் சித்தன்கேணி கணேசா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை மாணவர்களுக்காக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. பெப்பிரவரி மாதம் 27ம்திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த அங்குரார்ப்பண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த திறன் வகுப்பறையை சிவஸ்ரீ மு.குமாரசாமி குருக்கள் கு.வல்லவாம்பிகை அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பாடசாலையின் நான்காவது நவீன திறன் வகுப்பறையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த திறன் வகுப்பறையை வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.தி.ஜோன் குயின்ரஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறன் வகுப்பறையின் நினைவுப் பலகையை வலிகாமம் வலயக் ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.சி. முரளிதரன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்திருந்தார். திறன் பலகையை , வித்தியாலயத்தின் பழைய மாணவரும் லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தின் பிரதம குருவும், இத்திறன் வகுப்பறையை அமைத்துத் கொடுத்தவருமாகிய சிவஸ்ரீ ச.லம்போதர குமாரசாமி குருக்கள் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்ததோடு வைபவ ரீதியாக இயக்கியும் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.