அவுஸ்ரேலிய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் உலகிலிருந்து விடைபெற்றார்
அவுஸ்ரேலியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராகவும் திகழ்ந்த ஷேன் வோர்ண் தாய்லாந்தில் மரணமடைந்தார். மாரடைப்பால் மரணமாகியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியுடன் வேதனைகளைப் பகிர்ந்துவருகிறது.
1992 ம்ஆண்டு சர்வதேசக்கிரிக்கெட் உலகில் அறிமுகமான ஷேங் வோர்ண் தனது முதலாவது போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் தனது சுழல் பந்து வல்லமையை துடுப்பாட்ட உலகுக்கு கொண்டு வந்தார்.
2004ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மொத்தம் 24 விக்கெட்டுக்களை சாய்த்த ஷேங் வோர்ண், மொத்தம் 700 விக்கெட்டுக்களை டெஸ்ட் விளையாட்டுப் போட்டிகளில் கடந்த முதல் வீரராகவும் விளங்கினார்.
கடந்த 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர்கள் வரிசையில் முன்னிலையில் விளங்கிய வீரரும் கூட.
தாய்லாந்தில் விடுமுறைக்காக சென்ற வேளை மரணம் சம்பவித்ததாக அவரின் நிறுவனம் அறிவித்துள்ளது.