இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட புர்க்கினோ பாசோவின் ஆட்சியமைப்பில் ஒரு அரசாங்கம் தயாராகியது.
இராணுவத் தளபதியாக இருந்து ஆட்சியிலிருந்த ரொக் கபொரெயின் ஆட்சியைக் கவிழ்த்தவர் போல் – ஹென்ரி சண்டௌகோ டமீபா. அடுத்துவரும் மூன்று வருடங்களுக்கு அவரே நாட்டின் ஜனாதிபதியாக நியமியக்கப்பட்டிருக்கிறார். புதனன்று நடந்த பதவியேற்பின்போது 25 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியிலிருந்த பார்த்தலோமி சிம்போரே மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார். அல்பேர்ட்டோ ஊதிராகோ என்பவர் நாட்டின் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டார். மேற்கு ஆபிரிக்கப் பிராந்தியத்தில் பரவியிருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் முன்னேற்றத்தைப் புர்க்கினோ பாசோவில் ஒழித்துக் கட்டுவது புதிய அரசின் முக்கியமான ஒரு குறிக்கோள் என்று குறிப்பிடப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்