என்னுயிரே தமிழே
தமிழே வாழ்க
தரணியை காப்பவளே
தமிழ் தாயே போற்றி
நீயின்றி நானில்லை
உன்னை என்னாத நாளில்லை
என் உயிரிலே உறைந்தாய்
என் ஆத்தா தமிழச்சி
என் பேச்சே தமிழ்மூச்சி
உன்னை உணர்ந்தவர் கோடி
இந்த உலகை ஆள்பவர் சிலரே
உன் வாசம்
இந்த உலகை சுவாசிக்க செய்யும்
உன்னை அறிந்தவனுக்கு தூக்கு மேடை கூட பஞ்சு மெத்தை
உன்னோடு உறவாட எத்தனை எத்தனை இன்பம்
கம்பரை காளமேகனையும் அறிமுக படித்தியவளும் நீதானே
காதலை சொட்ட சொட்ட சுரக்க செய்தவள் நீதானே
கவிக்கூத்தனை பண்பாடா இசைந்ததும் நீதானே
நீதானே எனை இன்ப வானில் பறக்க செய்ததும் நீதானே
என்னுயிரே நீ என்பேன்
எழுதுவது: இலெட்சுமி
ஐயாக்கண்ணு, மலேசியா