வாழ்வின் உண்மை

கிளையில் இருக்கும் வரை இலைகள் அழுவதில்லை
மண்ணில் விழுந்து விட்டால் மறுபடியும்
துளிர்பதில்லை

கடலில் இருக்கும் வரை அலைகள் அலைவதில்லை
கரையை தொட்டு விட்டால் நுரைகள்
வாழ்வதில்லை

மேகம் இரங்கும் வரை மழைகள் பிறப்பதில்லை- அதன் வேகம் பொழிந்து விட்டால்
மண்ணை வெறுப்பதில்லை

ஆனால்

சூல் கொள்ளும் விந்தின் சூத்திரம் யாதோ
அது எதிர் கொண்டு வாழும் மந்திரம் யாதோ
வாழும் காலத்தில் செய்கின்ற தந்திரம் யாதோ
வாழ்வின் முடிவினில் செல்வது
மரணத்தின் ஊரோ

ஆசைகளில் பூசை செய்து
ஓசைகளில் காதல் நெய்து
பல பாஷைகளில் பயணம் செய்து- கடைசியில் செல்கின்ற இடம் மயானத்தின் வீடோ

எல்லாமே ஓர் நிகழ்வின் தொகுப்பு
எல்லோர்க்கும் வாழ்க்கை கற்கை வகுப்பு
பொல்லாதவர் எனும் பெயர் எடுக்கார் வாழ்வார் சிறப்பு
நல்லோர் இல்லாதார் பூமியில் பிறந்ததே வெறுப்பு

மரணம் என்பது நாளையும் வரலாம்
மரத்தின் இலை போல் நீயும் விழலாம்
குணத்தில் வாழ்வில் பெருமைபட வாழு
மரணம் அழைத்தாலும் வாழ்வாய்

பிறர் மன வீடு வளரும்…..!

எழுதுவது : சுபபாலா