இலக்கு|வெற்றியின் முன்னேற்றம்
தோல்வி அடையும் போது மாற்ற வேண்டியது உன்
வழிகளைத்தான் இலக்குகளை அல்ல…
வாழ்க்கை இலக்குகளை வைத்து முன்னேறிக் கொண்டே இரு…
நேரம் உன் வசம் இருந்தால் வெற்றியின் இலக்கு உன் வசமாக மாறும்…
உன் வாழ்வின் பாதையை மாற்ற நினைத்தால் பயணம் மாறும்…
வாழ்க்கையில் மாற்றத்தை எதிர் கொண்டால் ஏமாற்றம் கூட ஒரு நாள் மாற்றமாக மாறும்…
உன் வாழ்வின் திருப்புமுனை தன்னம்பிக்கையும்; விடா முயற்சியும்; பயிற்சியும்; மன தைரியம் ; மனத்துணிவுடன் உறுதியும் இருந்தால் எளிதாக வெற்றியின் இலக்குகளை வென்றுவிடலாம்
எதையும் துணிந்து செய்தால் துயரம் கூட தூசியாக மாறிவிடும்…
நீ செல்லும் பாதையில் ஆயிரம் தடைகள் வந்தாலும் மனதில் உறுதியுடன் இருந்தால் இமயம் அளவிற்கு இலக்கை அடைந்துவிடலாம்…
வெற்றி இலக்குயை அடைய சொல்வதை காட்டிலும் செயலில் காட்டி விடு…
இலக்குகளை அடைய போராடு போராட்டத்தில் தான் உன் வாழ்வின் வெற்றி இலக்கு இருக்கிறதே…
இலக்குகளை அடைய வலிகளை பார்க்காதே எப்படி அடைய முடியும்
வழிகளை மட்டும் பார்…
எண்ணங்கள் இலக்குகளை நோக்கி எண்ணிக்கொண்டே
எண்ணத்தின் வழியே இலக்குகளை அடைந்து விடலாம்…
எழுதுவது : மா.நந்தினி ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) சேலம்.