அன்னையென்ற எம் தெய்வம்
ஈன்றெடுத்த அன்னைக்கு
ஈடு இணை வேறாரு
தெள்ளந் தெளிந்த அவளன்பில்
தெய்வம் வந்து குடியிருக்கும்..
உச்சி நுகரும் அரவணைப்பில
மாசு துளியும் கிடையாது
ஈ எறும்பு கடிக்காமல்
விழித்திருந்து காத்திடுவாள் ..
விபரம் பல அறியும்படி
பக்குவமாய் நல்கிடுவாள்
நடை தவறி விழும்பொழுதில்
தலை கோதி வலி நீக்கிடுவாள்..
அத்தனை உறவுகளும்
அன்னை உருவில் கண்டிடலாம்
மெத்தன மில்லா செயல்களினால்
மேன்மையாய் வாழ்ந்திடலாம்…
கருவான நாள் முதலே
அன்னையர் தினம் தானே – நாம்
அவள் கருணையினால்
உலவுகின்ற உரு தானே…
கைமாறு செய்து சமன் செய்ய
கடன் ஒன்றும் இல்லையிது
அனு தினமும் அன்பு செய்து
கடைசி வரை காத்திடுவோம்..
எனை ஈன்ற அன்னைக்கும்
நான் ஈன்ற பிள்ளைக்கும்
அன்னையாய் வருடுகின்ற
அற்புத நகலுக்கும் அவ் அழகிற்கும்…
மரமோ செடியோ புழுவோ
ஈ எறும்போ விலங்கோ
உலகில் உள்ள அத்தனை
அன்னையெனும் ஜீவ ராசிக்கும்…
எழுதுவது : வெண்பா பாக்யா