தலிபான்களால் கொல்லப்பட்ட இந்தியப் படப்பிடிப்பாளர் டனிஷ் சித்தீக்கி மீண்டும் புலிட்சார் பரிசை வென்றார்.
2022 ம் ஆண்டுக்கான புலிட்ஸர் பரிசுகள் திங்களன்று அறிவிக்கப்பட்டன. பத்திரிகைத் துறையச் சேர்ந்தவர்களிடையே மிகவும் கௌரவமான இப்பரிசுகள் அமெரிக்காவில் 1917 ம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வருவருகின்றன. பதிக்கப்படும் பத்திரிகைகள் மட்டுமன்றி இணையத்தளத்தில் வெளிவரும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களில் திறமையானவர்களுக்கும் வருடாவருடம் கொடுக்கப்பட்டு வருகிறது புலிட்சர் பரிசுகள். அவைகளிலொன்று மறைந்த படப்பிடிப்பாளர் டனிஷ் சித்தீக்கிக்கும் கொடுக்கப்பட்டன. https://vetrinadai.com/2022/03/27/danish-siddiqis-family-files-case-against-taliban-leaders-in-icc/
சிறந்த பொதுச் சேவை என்ற பரிசைப் பெற்றது வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகை 2021 இல் அமெரிக்காவின் பாராளுமன்றம் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டதை வெளியிட்ட விபரங்கள். அவ்வருடம் ஜனவரி 06 ம் திகதி நடந்த அந்தக் கலவரத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அதற்குப் பின்னால் டிரம்ப் தனது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாரா என்பது பற்றிய விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்திய ஊடகப் படப்பிடிப்பாளரான டனிஷ் சித்தீக்கி இந்தியாவின் கொவிட் பாதிப்புகள் இறப்புக்கள் பற்றி வெளியிட்ட படங்களுக்காகப் பரிசைப் பெற்றார். அவரைத் தவிர இந்தியாவைச் சேர்ந்த அட்நான் அபிடி, சன்னா இர்ஷாத் மத்தூ, அமித் தேவ் ஆகியோருக்கும் புலிட்சர் பரிசு அவ்விடயத்துக்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்